
31.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் இயக்கப்படும் சிறப்பு சேவை – பயணிகள் கவனத்திற்கு…!
திருவண்ணாமலையில் நடைபெறும் மாதாந்திர பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு இணைப்பு ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. பரங்கிப்பேட்டை, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் இந்த சேவைகளைப் பயன்படுத்தி எளிதாக திருவண்ணாமலை சென்றடையலாம்.
பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து தினமும் மாலை 4.45 மணிக்கு புறப்படும் நேரடி ரயில் மூலம் திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகளுக்கு பயணம் செய்ய முடியும். இந்த சேவையின் மூலம் விழுப்புரத்தில் இறங்கி ரயில் மாற வேண்டிய அவசியமில்லை என்பது பயணிகளுக்கு பெரிய வசதியாக உள்ளது.
இந்நிலையில், பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால், பரங்கிப்பேட்டையிலிருந்து காலை நேரத்திலும் மாலை திரும்பும் நேரத்திலும் இணைப்பு ரயில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையைப் பயன்படுத்தும் பயணிகள் விழுப்புரம் சந்திப்பில் ரயில் மாறி பயணிக்க வேண்டும்.
பயணிகளுக்கு முக்கிய அறிவுரை…!
31.05.2026 ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படும் சிறப்பு இணைப்பு ரயில்களின் கால அட்டவணையை முன்கூட்டியே சரிபார்க்கவும்.
தொலைதூர நகரங்களுக்கு பயணம் செய்யும் பயணிகள், பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்திலேயே நேரடியாக இணைப்பு பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
நிலையத்தில் பயணச்சீட்டு கிடைக்காத பட்சத்தில், RailOne செயலி மூலம் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா பயணச்சீட்டுகளை எளிதாகப் பெறலாம்.
ரயில் நேரங்கள் மற்றும் தள விவரங்களை உறுதிப்படுத்த NTES, IXIGO, Where Is My Train போன்ற செயலிகளைப் பயன்படுத்துமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பயணியர் நலச்சங்கத்தின் வேண்டுகோள்.
குறைந்த கட்டணம், அதிக பாதுகாப்பு மற்றும் வசதியான பயண அனுபவம் ஆகியவற்றை வழங்கும் ரயில் சேவைகளை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் (PNO-PNS) வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தின் வருமான உயர்வே எதிர்காலத்தில் புதிய ரயில் சேவைகள், கூடுதல் வசதிகள் மற்றும் நிலைய வளர்ச்சிக்கான அடித்தளமாக அமையும் என்பதால், பொதுமக்கள் ரயில் பயணத்தை ஊக்குவிக்க வேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.
“குறைந்த கட்டணத்தில் நிறைவான பயணம் – பாதுகாப்பான பயணத்திற்கு ரயிலைத் தேர்வு செய்வோம்; பரங்கிப்பேட்டை ரயில் நிலைய வளர்ச்சிக்கு பங்களிப்போம்” என பயணியர் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.
ஷேக் முகைதீன் – இணை ஆசிரியர்.
*⛈️ கிரிவல பக்தர்கள் கவனத்திற்கு…*
திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இன்று (30.05.2026) இரவு பலத்த இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
கிரிவலம் செல்லும் பக்தர்கள் இடி, மின்னலின்போது மரங்களுக்கு அடியில் நிற்பது, நடப்பதை தவிர்ப்பது அவசியம்; மழைப்பொழிவு 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் என்பதால் மழைக்கு பின்பு கிரிவலம் செல்லலாம்.
