வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற அலுவலகத்தில், த.வெ.க எம்எல்ஏ சிந்து அழகப்பனிடம் பொதுமக்கள் நேரில் சென்று கோரிக்கை மனு வழங்கியுள்ளனர். எம்எல்ஏ மனுவைப் பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரி மூலம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும், அலுவலகம் திறந்து இரண்டு நாட்களில் சுமார் 200 மனுக்கள் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். நிகழ்ச்சியில் குடியாத்தம் த.வெ.க நகர கழகச் செயலாளர் இளங்கோ, ஒன்றியச் செயலாளர் கலைச்செல்வம், மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர் சவிதா, கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமாக கலந்துகொண்டனர்.
செய்தியை வெளியிட்டவர்: குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்.
