தஞ்சாவூர், மே 21: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டுப் பணிகளால் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண இருசக்கர வாகன நிறுத்துமிடம் ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, போக்குவரத்து ஏஐடியுசி (அகில இந்திய தொழிற் சங்கம்) சம்மேளனம் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்தது.
சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து வாழ்த்து.
தமிழ்நாடு 17வது சட்டமன்ற தேர்தலில் தவெக (தமிழ் வெற்றிக் கழகம்) சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஆர். விஜய சரவணன் அவர்களை, மே 20ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் போக்குவரத்து ஏஐடியுசி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து, பல்வேறு நீடித்த பிரச்சினைகள் குறித்த மனுவை அளித்தனர்.
பழைய பேருந்து நிலைய போக்குவரத்து நெருக்கடி – விரிவான கோரிக்கைகள்:
1. இருசக்கர வாகன நிறுத்துமிடம் வழங்க வேண்டும்:
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட பின்னர், எதிரில் உள்ள திருவையாறு மார்க்கப் பேருந்துகளும் இங்கிருந்தே இயக்கப்படுகின்றன. மேலும், தற்போது 60க்கும் மேற்பட்ட தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கும், தனியார் மினி பேருந்து தொழிலாளர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. இதற்குத் தீர்வாக, அருகிலுள்ள மாநகராட்சி இருசக்கர வாகன நிறுத்துமிடத்தை காலி செய்து, பேருந்து நிலைய விரிவாக்கத்திற்கு ஒதுக்கித் தர வேண்டும்.
2. மாணவர்களுக்கான கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்:
ஜூன் மாதம் பள்ளிகள் மற்றும் அதனை அடுத்து கல்லூரிகளும் திறக்கப்பட உள்ளன. கிராமங்களில் இருந்து நகருக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இயக்கப்பட்ட எண்ணிக்கையிலான பேருந்துகள் போதுமானதாக இல்லை. எனவே, அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்துடன் பேசி, நகர மற்றும் புறநகர் பேருந்துகளின் எண்ணிக்கையை கூட்டவேண்டும்.
3. நகரப்புற வழித்தட மாற்றம் சிக்கல்:
ஏற்கனவே, நகர்ப்புற வழித்தடங்களை மாற்றி, சில வழித்தடங்கள் கிராமப்புறத்திற்குத் திருப்பி விடப்பட்டதால், தஞ்சாவூர் நகரின் முக்கிய பகுதிகளான புதிய பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி வழித்தடங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் நகர மக்கள் குறிப்பிட்ட நேரங்களில் பயணம் செய்வதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
பள்ளிகள் குறித்த கோரிக்கைகள்:
தஞ்சாவூர் மாநகரில் உள்ள 1 முதல் 51 வரையிலான வார்டுகளில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். அதில்,
· ஆண்கள், பெண்களுக்கான கழிவறைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும்.
· குடிநீர் வசதியை உறுதி செய்ய வேண்டும்.
· பழுதடைந்த கட்டிடங்களை புதுப்பிக்க வேண்டும்.
· பள்ளிகளை அடையும் வழிகள் சிமெண்ட் தளமாக மாற்றப்பட வேண்டும்.
அறிவியல் பூங்கா மற்றும் போக்குவரத்து பூங்கா:
· அருளானந்த நகர் அறிவியல் பூங்கா: 10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இப்பூங்கா தற்போது மூடப்பட்டு, புதர்கள் மண்டிக் கிடக்கிறது. மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இதை புதுப்பித்து, அனைவரும் இலவசமாக பார்வையிட ஏற்பாடு செய்ய வேண்டும்.
· பெரிய கோவில் அருகிலுள்ள போக்குவரத்து பூங்கா: சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இந்தப் பூங்காவை உடனடியாகத் திறந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
நிகழ்வில் பங்கேற்றோர்:
போக்குவரத்து ஏஐடியுசி சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் துரை. மதிவாணன், கும்பகோணம் போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் எஸ். தாமரைச்செல்வன், துணைத் தலைவர் ஆர். ரங்கதுரை, துணைச் செயலாளர் என். ராஜேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் மனு அளிக்கப்பட்டது.
செய்தியாளர்: கோ. வளங்கோவன்