மே 12 – வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கெங்கையம்மன் வைகாசி திருவிழா வரும் 15.05.2026 அன்று வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
புகழ் வாய்ந்த இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுடன், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கண்டு களிப்பது வழக்கமாகும்.
நடைபெற உள்ள கெங்கையம்மன் சிரசு திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுபலட்சுமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, வட்டாட்சியர் சந்தோஷ், நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி மற்றும் திருவிழா கமிட்டியினர் உடனிருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் : கே.வி. ராஜேந்திரன்