திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ராமகிருஷ்ணன், நேற்று திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.
அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சரவணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து திண்டுக்கல் சரக DIG சசிமோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உள்ளிட்ட அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், DSP ராமகிருஷ்ணன் உடல் காவல்துறை மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ச. சந்திரமோகன், திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், தமிழ்நாடு டுடே