Thu. Apr 16th, 2026

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றிய பகுதிகளில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஜி. பரிதா புருஷோத்தமன் அவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஏப்ரல் 15:
குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஜி. பரிதா புருஷோத்தமன் அவர்கள் இன்று அதிகாலை முதலே அனல் பறக்கும் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கினார்.

காலை 7 மணியளவில் எர்தாங்கல் ஊராட்சி பகுதியில் தொடங்கிய இவர், இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து சேம் பள்ளி, கொட்டாரம், மடுகு, உப்பரபள்ளி, ஜங்கால் பள்ளி, பூங்குளம், அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த பிரச்சாரத்தில் தேர்தல் பொறுப்பாளர் சதீஷ் சங்கர், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் டி. சிவா, ஒன்றிய மாவட்ட பிரதிநிதி சுஜாதா தஷ்ணாமூர்த்தி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏ. சிவகுமார், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இ. சரவணன், சேம் பள்ளி லலிதா, ஹரி சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வேட்பாளர் பரிதா அவர்கள் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் மேளதாளத்துடன் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS