Mon. Apr 13th, 2026

வேலூர், ஏப் 13:

வேலூர் மாவட்டத்தில் உள்ள டிரினிட்டி பள்ளியின் ஆண்டு விழா, DNET கல்வி நிறுவனங்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு DNET கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் தேவநாயகி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர், பள்ளித் தாளாளர் கேப்டன் பிரசாத் குமார் தலைமை தாங்கினார்.

பேரணாம்பட்டு, பல்லலகுப்பம், பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் செயின்ட் ஜோசப், செயின்ட் பால்ஸ், அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், நர்சிங் பள்ளி மற்றும் NEET பயிற்சி மையம் போன்ற பல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் DNET நிறுவனம், 2024–25 கல்வியாண்டு முதல் டிரினிட்டி பள்ளியையும் தங்களது நிர்வாகத்தில் இணைத்துள்ளது.

இந்த ஆண்டு விழாவில் அறக்கட்டளை அறங்காவலர் ஆசிரியை ரங்கநாயகி முன்னிலை வகித்தார். டாக்டர் நவீன் தேவப்பிரியன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மூத்த வழக்கறிஞர் கே.எம். பூபதி மற்றும் ஆடிட்டர் மனோகரன் கலந்து கொண்டு, போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மணிகண்டன், தலைமை ஆசிரியர் கிரேஸ் அண்ண பாக்கியம் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். மாணவர்களின் விழிப்புணர்வு நடனங்கள் மற்றும் நாடகங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன.

மேலும் எண்ணூர் துறைமுக முதன்மை மேலாளர் கேப்டன் மகேஸ்வரன், ஹாங்காங் கப்பல் துறை கேப்டன் சரவணன், தென்னக ரயில்வே வணிக கண்காணிப்பாளர் பர்குணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கண்காணிப்பு குழு உறுப்பினர் லாவண்யா தினேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இறுதியாக, அறக்கட்டளை இயக்குநர் நரேந்திர குமார் நன்றி உரையாற்றினார்.

பட விளக்கம்:
வேலூர் டிரினிட்டி பள்ளி ஆண்டு விழா – பள்ளித் தாளாளர் கேப்டன் பிரசாத் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சிறப்பு அழைப்பாளர்களாக வழக்கறிஞர் கே.எம். பூபதி மற்றும் ஆடிட்டர் மனோகரன் கலந்து கொண்டனர்.

✍️ குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்


By TN NEWS