திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் டி.எஸ். வேலு தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட தானியப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி நிர்வாகிகள் அவருக்கு வெற்றிவேல், வீரவேல் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்வில் தேர்தல் பொறுப்பாளர் துரை செந்தில், ஒன்றிய செயலாளர் அருள் குமார், கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், பாமக, பாஜக, அ.ம.மு.க உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்றனர்.
தொடர்ந்து, வேட்பாளர் டி.எஸ். வேலு வாக்காளர்களை சந்தித்து ஆதரவு கோரி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
சக்திவேல் விஜயன், விழுப்புரம் மாவட்ட க்ரைம் செய்தியாளர்