குடியாத்தம், ஏப்ரல் 6:
வனத்துறையின் நடவடிக்கைகளை கண்டித்து, வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியாத்தம் தொகுதியில் மட்டும் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான ஆதரவை திரட்டும் வகையில், விவசாயிகள் சங்கத்தினர் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் (நோட்டீஸ்) வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இது தொடர்பாக விவசாயிகள் சங்கத்தினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பேரணாம்பட்டு அருகே சாரங்கள் கிராமத்தை சேர்ந்த துரைசாமி என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு யானை தாக்கி உயிரிழந்தார். அவரது மகன்கள் மோகன்பாபு மற்றும் சபரிஷ் மீது வனத்துறையினர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்த வழக்கு முற்றிலும் பொய்யானது என குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வனத்துறை அமைச்சரிடம் பலமுறை மனு அளித்தும், அரசு வழக்கை திரும்ப பெற அறிவுறுத்தியிருந்தும், வனத்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.
மேலும், வனவிலங்குகள் தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்துவதை கட்டுப்படுத்தாததுடன், விவசாயிகள் மீது பொய்வழக்குகள் பதிவு செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வனத்துறையை கண்டித்து குடியாத்தம் தொகுதியில் மட்டும் தேர்தலை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாகவும், இதுவரை எந்த அதிகாரியும் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுகா செய்தியாளர்