Tue. Apr 7th, 2026

திண்டுக்கல், ஏப்ரல் 6:

திண்டுக்கல் அருகே நடைபெற்ற வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1,10,000 பணம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்லை அடுத்த பழைய கரூர் சாலையில் உள்ள செல்லமந்தாடி சோதனைச் சாவடி பகுதியில், சிவராமகிருஷ்ணன் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மாரம்பாடி பகுதியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் பயணம் செய்த அமலதாஸ் மகன் அந்தோணி என்பவர், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1,10,000 பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுல்தான் சிக்கந்தர் மற்றும் துணை தாசில்தார் பிரேம்குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், அந்த தொகை அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

சந்திரமோகன், திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்


By TN NEWS