கடலூர்
சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் தமிமுன் அன்சாரி அவர்கள், இன்று சிதம்பரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து தனது தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை விரிவாக விளக்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:
“நான் வெற்றி பெற்றால், சிதம்பரம் தொகுதியின் முழுமையான வளர்ச்சிக்காக பல முக்கிய திட்டங்களை கொண்டு வருவேன். குறிப்பாக அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்ந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும்,” என்றார்.
மேலும் அவர் கூறிய முக்கிய திட்டங்கள்:
சி. முட்லூர் முதல் புதுச்சித்திரம் அருகே செண்ட் (சிமெண்டு/தொழிற்துறை) தொழிற்சாலை அமைத்தல்
சிதம்பரத்தில் 1983ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட சட்டப் படிப்பை மீண்டும் தொடங்குதல்
பரங்கிப்பேட்டை அருகே மகளிர் கல்லூரி நிறுவுதல்
கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை மற்றும் முதலைப் பண்ணை அமைத்தல்
இதுகுறித்து அவர் மேலும் வலியுறுத்தியதாவது, “சிதம்பரம் பகுதியை கோவில் நகரமாக மட்டுமல்லாமல், கல்வி மற்றும் சுற்றுலா மையமாகவும் முழுமையாக மேம்படுத்துவேன்” என்றார்.
அதனைத் தொடர்ந்து, தனது மீது குற்றச்சாட்டு கூறும் சமூக ஊடகங்களில் உள்ள போலி ஐடி வைத்திருப்பவர்களை நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைத்து, “அந்த 50 பேரை இங்கே வரச் சொல்லுங்கள்; நான் தனியாக வருகிறேன். நேரலை ஒளிபரப்பில் விவாதிப்போம். உண்மையை மக்கள் தீர்மானிக்கட்டும்,” என சவால் விடுத்தார்.
பத்திரிகையாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் தெளிவான பதில்களை அளித்தார்.
சிவக்குமார், சிதம்பரம் செய்தியாளர்