Fri. Apr 3rd, 2026

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள குறிஞ்சிப்பை வடக்கு தாங்கள் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அமைச்சர் அம்மன் கோவிலில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறப்பான திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

பங்குனி மாத பௌர்ணமி தினத்தையொட்டி நடைபெற்ற இந்த விழாவில், அதிகாலை அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், தேன், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இரவு நேரத்தில் அம்மன் பலவித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பங்குனி உத்திரம் திருநாளையொட்டி முருகப்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

இதில், பெண் பக்தர்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு, 1008 சங்கல்பம் செய்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்தியாளர்: சக்திவேல் விஜயன், விழுப்புரம் மாவட்ட கிரைம் செய்தியாளர்.

By TN NEWS