குடியாத்தம், ஏப்ரல் 1:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.தி.மு.க) தேர்தல் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
குடியாத்தம் கொச அண்ணாமலை தெரு, சிவசிவ கோயில் அருகில் அமைந்துள்ள தலைமை தேர்தல் அலுவலகம், இன்று (01.04.2026) புதன்கிழமை காலை 10.30 மணியளவில் நகர கழக செயலாளர் ஜே.கே.என். பழனி அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் சதீஷ் சங்கர் கலந்து கொண்டார். மேலும், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி ஜி. பரிதா புருஷோத்தமன் மற்றும் ஜே.கே.என். பழனி ஆகியோர் இணைந்து தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர்கள் கஸ்பா ஆர். மூர்த்தி, அமுதா சிவப்பிரகாசம், நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் — பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜி.கே. ரவி, பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் ஜெகன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் எஸ். அருணோதயம், புதிய நீதி கட்சி மாவட்ட செயலாளர் செந்தில்குமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நகரச் செயலாளர் சங்கர், புரட்சி பாரதம் நகர செயலாளர் கங்காதரன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் குணசீலன், இந்திய ஜனநாயக கட்சி பாபாஜி, தமிழ் மாநில பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் குமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
மேலும், கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்