கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வடக்கு பகுதியிலுள்ள அண்ணா நகர் பகுதியில் சாலை வசதி தொடர்பாக புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அண்ணா நகர் லே-அவுட்டில், அப்பகுதி மக்களுக்கு வெறும் 12 அடி அகலமுள்ள சாலை மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதே நேரத்தில் அருகிலுள்ள சந்தோஷ் நகர் லே-அவுட்டில் 20 அடி அகல சாலை வசதி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த இரண்டு லே-அவுட்களுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அண்ணா நகர் பகுதியை வழியாக சாலை அமைக்கப்படும் என எந்த எழுத்துப்பூர்வ ஒப்பந்தமும் அல்லது பத்திரப்பதிவும் செய்யப்பட்டதாக ஆதாரம் இல்லை என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில், காலியாக இருந்த தனியார் பட்டா நிலம் வழியாக பொதுமக்கள் நீண்ட காலமாக நடந்து சென்று வந்துள்ளனர். தற்போது அந்த பாதையை அதிகாரப்பூர்வ சாலையாக மாற்ற வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், சம்பந்தப்பட்ட நிலம் தனிநபரின் பட்டா நிலமாக இருப்பதால், சட்டரீதியான சிக்கல்கள் எழுந்து, இந்த விவகாரம் புதிய சர்ச்சையாக மாறியுள்ளது.
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி