Mon. Mar 23rd, 2026

📍 செஞ்சி – விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை மிகுந்த பக்தியுடன் நடைபெற்றது.

🔹 செஞ்சி கோட்டையில் உள்ள சாதுல்லாகான் பள்ளிவாசல் மற்றும் கிருஷ்ணாபுரம் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற தொழுகையில், 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

🔹 இதற்கு முன் நடைபெற்ற ரமலான் ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி பண்டிகை வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

🗣️ எம்.எல்.ஏ மஸ்தான் உரை:

செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மஸ்தான் தொழுகையில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது:

✨ “உலகம் முழுவதும் மக்கள் ஒற்றுமை, சகோதரத்துவம், சமத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்” என ரமலான் வாழ்த்துகளை தெரிவித்தார்.

🔹 மேலும், தாய் தந்தையை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பிற்காக “அன்பு கரங்கள்” திட்டத்தை கொண்டு வந்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

📢 ரமலான் பண்டிகை செஞ்சியில் ஆன்மீக உணர்வோடும், சமூக ஒற்றுமையையும் வலியுறுத்தும் வகையிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

📰 விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர்: தமிழ். மதியழகன்

By TN NEWS