திண்டுக்கல், மார்ச் 22:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் மழையின்றி நீடிக்கும் வறண்ட காலநிலை காரணமாக, வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விளைநிலங்களில் தாவரங்கள் காய்ந்து கிடக்கின்றன.
இந்நிலையில், கொடைக்கானல் பேத்துப்பாறை அருகிலுள்ள புலியூர், பாரதி அண்ணா நகர், அஞ்சு வீடு உள்ளிட்ட பகுதிகளில், வன எல்லையை ஒட்டிய நிலங்களில் காட்டுத்தீ பரவி எரிந்து வருகிறது.
இந்த தீ உடனடியாக கட்டுப்படுத்தப்படாவிட்டால், அருகிலுள்ள வனப்பகுதிகளுக்கும் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், காட்டுத்தீ காரணமாக கரும்புகை பரவி, சுற்றுப்புற மக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.
எனவே, காட்டுத்தீயை விரைவாக கட்டுப்படுத்த வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் சந்திரமோகன்