செஞ்சி | விழுப்புரம் மாவட்டம்
தேர்தல் தேதிகள் அறிவிப்பு.
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு சீல்.
இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வணக்கம்பாடி பகுதியில் அமைந்துள்ள செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வருவாய்த்துறையினர் பூட்டு போட்டு சீல் வைத்தனர்.
இந்த நடவடிக்கை மேல்மலையனூர் வருவாய் வட்டாட்சியர் வேலு தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
எம்.ஜி.ஆர் சிலை மறைப்பு.
அதே பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் திருவுருவ சிலையும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி துணியால் சுற்றி மறைக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து அரசு மற்றும் அரசியல் தொடர்புடைய இடங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
செய்தி:
தமிழ். மதியழகன்
முதன்மை செய்தியாளர், விழுப்புரம் மாவட்டம்