Tue. Mar 17th, 2026

குடியாத்தம் | வேலூர் மாவட்டம் | மார்ச் 15

பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில், சமையல் எரிவாயு (கேஸ்) விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.

எம்எல்ஏ அமுலு விஜியன் தலைமையில்:

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன் வரவேற்புரை ஆற்றினார்.

மத்திய அரசுக்கு எதிராக கண்டனம்:

கேஸ் விலை உயர்வு மற்றும் விநியோக தட்டுப்பாடு பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதாகக் கூறி, மத்திய அரசை கண்டித்து கூட்டணி கட்சிகள் சார்பில் கடும் கண்டனக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பலர் பங்கேற்பு:

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் கல்லூர் ரவி, நகர மன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ். அரசு, ஆட்டோ மோகன், சுமதி, மகாலிங்கம், புவியரசி உள்ளிட்டோர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி:
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்

By TN NEWS