தென்காசி, மார்ச் 14:
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் எஸ்.டி.பி.ஐ (SDPI) கட்சியின் சார்பில் இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ நிர்வாகி சாகுல் ஹமீது தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் சுரண்டை நகரத் தலைவர் அப்பாஸ், நகர துணைத் தலைவர் எஸ். மறைக்காயர் மற்றும் சுரண்டை நகரச் செயலாளர் அமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்
இதில் சிறப்பு அழைப்பாளராக விமன் மூவ்மென்ட் மாவட்ட துணைத் தலைவர் முபினா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் மாவட்டச் செயலாளர் சுளைகால் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சாம்பவர் வடகரை ஜமாத் கமிட்டி செயலாளர் கனி, தென்காசி தொகுதி செயலாளர் கோல்டன் செய்யது அலி பாதூஷா மற்றும் ஏ.எஸ்.எம் மொத்த காய்கறி கமிஷன் கடை உரிமையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இப்தார் நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்களும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் ஜலால் காமிலா அவர்கள் துவா ஓதி நிகழ்ச்சி நிறைவடைந்தது.
அமல்ராஜ்
தலைமை செய்தியாளர், தென்காசி மாவட்டம்
