குடியாத்தம், மார்ச் 11
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வாலிபர் ஒருவரை போலீசார் போக்ஸ்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
குடியாத்தம் அடுத்த கஸ்பா பகுதியை சேர்ந்த யோகி (24) என்பவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி மனநல பாதிப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், யோகி அந்த சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று சிறுமி வீட்டிலிருந்து கடைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றபோது, யோகி ஆசை வார்த்தைகள் கூறி யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் வீட்டிற்கு திரும்பிய சிறுமி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் யோகி மீது போக்ஸ்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்