Tue. Mar 10th, 2026

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல் களவாய் காரியமங்கலம் கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள டேனி கல்வியியல் கல்லூரி மற்றும் டேனி மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் உலக மகளிர் தினம் மற்றும் தேசிய அறிவியல் தினம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு டேனி கல்விக் குழுமத்தின் தலைவர் ஜாஸ்பர் தலைமை தாங்கினார். கல்விக் குழுமத்தின் செயலாளர் டாக்டர் ஸ்டெல்லா பாக்கியவதி முன்னிலை வகித்தார். கல்வியாளர் முனைவர் சக்திவேல் நோக்கவுரையாற்றினார்.

கல்லூரி முதல்வர் மகாலட்சுமி வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக வல்லம் ஒன்றிய குழு பெருந்தலைவர் அமுதா ரவிக்குமார் மற்றும் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சந்திரா கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து மகளிர் தின விழாவில் சிறப்புரையாற்றினர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் ஹைட்ராலிக் பிரிட்ஜ், ஹைட்ரோபோனிக் தாவர வளர்ப்பு முறை, டி.என்.ஏ மாதிரி, சோலார் சிஸ்டம், மருத்துவ மூலிகைத் தாவரங்கள், டெய்ரி பண்ணை, நீர் சுத்திகரிப்பு முறை, பல்வேறு ஆற்றல் வகைகள், பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகள் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் மாதிரிகளை காட்சிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியை பேராசிரியர்கள் தபிதா விண்ணரசி, பரிதி ஓவியா, சரவணன், மரியசெல்வம், ரமேஷ்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கயல்விழி, கனிமொழி, மகாலட்சுமி, விண்ணரசி, அருள்மொழி, சூரியபிரகாஷ், அஸ்வினி, சாமுண்டீஸ்வரி, கலைச்செல்வி, வெண்ணிலா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இறுதியாக பேராசிரியர் ஈஸ்வரி நன்றியுரை வழங்கினார்.

செய்தி: சக்திவேல் விஜயன்
விழுப்புரம் மாவட்ட கிரைம் செய்தியாளர்




By TN NEWS