திருக்கோவிலூர், மார்ச் 6:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அரகண்டநல்லூர் பகுதியில், திருக்கோவிலூர் நகரப் பகுதியையும் அரகண்டநல்லூர் பேரூராட்சியையும் இணைக்கும் வகையில் ரூ.112 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உயர்மட்டப் பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் க. பொன்முடி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் முருகன், மூத்த வழக்கறிஞர் தங்கம், நகர மன்ற கவுன்சிலர்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பாலம் கட்டப்பட்டு முடிவடைந்த பிறகு திருக்கோவிலூர் மற்றும் அரகண்டநல்லூர் பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்து வசதி மேம்பட்டு பொதுமக்களுக்கு பெரிதும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டது.
V. ஜெய்சங்கர்
மக்கள் தொடர்பு அதிகாரி
கள்ளக்குறிச்சி மாவட்டம்
தமிழ்நாடு டுடே

