குடியாத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் மாற்றிய பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து, அந்தத் திட்டத்தின் பெயரை மாற்றாமல் அடிப்படை அம்சங்கள் பாதிக்கப்படாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று (06.02.2026) காலை 10 மணியளவில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மனு அளிக்கும் நிகழ்வு
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, குடியாத்தம் கோட்டாட்சியர் வாயிலாக பாரத பிரதமர் மற்றும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனு அளிக்கப்பட்டது. இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் அடிப்படை நோக்கம் காக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தலைமை மற்றும் முன்னிலை
இந்த நிகழ்விற்கு வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் தேவகிராணி ராஜேந்திரன், காமராஜ், சேகரன், யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உரைகள் மற்றும் கோஷங்கள்
மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் NMD.விக்ரம் வரவேற்புரை ஆற்றினார். வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் பாரத் நவீன்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிகழ்வில் பாஜக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பெருந்திரளான பங்கேற்பு
ஆர்ப்பாட்டத்தில் வட்டார மற்றும் பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள், சிறுபான்மையினர், எஸ்ஸி, ஓபிசி, RGPRS பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
நன்றியுரை
நிகழ்வின் முடிவில் குடியாத்தம் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீராங்கன் நன்றியுரை ஆற்றினார்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்