நந்தன் கால்வாய் திட்டத்தை கிடப்பில் போட்டு, டாஸ்மாக் வருமானத்தை உயர்த்தும் திமுக அரசு – சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு.
செஞ்சி :
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்தாமல் திமுக அரசு அலட்சியம் காட்டி வருவதாகவும், அதே நேரத்தில் டாஸ்மாக் வருமானத்தை உயர்த்த மட்டும் அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது என பசுமைத் தாயகம் தலைவர் மருத்துவர் சௌமியா அன்புமணி குற்றம் சாட்டினார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த அப்பம்பட்டு தனியார் திருமண மஹாலில்
“சிங்கப்பெண்ணே எழுந்து வா” என்ற தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயண நிகழ்ச்சி, சனிக்கிழமை (ஜனவரி 10) நடைபெற்றது.
நிகழ்ச்சி விவரம்
இந்த நிகழ்ச்சி,
மயிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ச. சிவகுமார் தலைமையிலும்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி சிறப்புரையாற்றினார்.
குடிநீர் திட்டங்கள் புறக்கணிப்பு – மக்களின் அவலம்.
அப்போது பேசிய அவர், செஞ்சி பகுதியில் திருக்கோவிலூர் கூட்டு குடிநீர் திட்டத்தை அமல்படுத்த திமுக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
இதன் காரணமாக, உப்பு கலந்த சுண்ணாம்பு கலந்த தண்ணீரை பொதுமக்கள் குடிக்க வேண்டிய அவலநிலை நிலவுகிறது என்றும்,
குடிநீர் பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.
நந்தன் கால்வாய் திட்டம் – விவசாயிகளின் வாழ்வாதாரம்.
செஞ்சி பகுதியில் அதிக அளவில் விவசாயிகள் வசித்து வருவதாக குறிப்பிட்ட அவர்,
தென்பெண்ணை ஆற்றின் நீரை நந்தன் கால்வாய் மூலம் கொண்டு வந்தால், சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என்றார்.
ஆனால், விவசாயிகளின் வாழ்வாதாரமான நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்,குடிப்பதற்கும் தண்ணீர் இல்லை விவசாயத்திற்கும் தண்ணீர் இல்லை.
ஆனால்,
டாஸ்மாக் மூலம் கிடைக்கும் ‘தண்ணீர்’ (மது) மட்டும் ஆறாக ஓடுகிறது என கடுமையாக விமர்சித்தார்.
டாஸ்மாக் கடைகள் – மாணவர்கள் பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும்
சுமார் 200 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன என்றும்,
மக்கள் கேட்கும் நந்தன் கால்வாய் திட்டம், திருக்கோவிலூர் குடிநீர் திட்டம் போன்ற அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றாமல்,
டாஸ்மாக் கடைகளை திறப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறது என சௌமியா அன்புமணி குற்றம் சாட்டினார்.
மேலும், செஞ்சி அரசு கலைக் கல்லூரி அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருவதால்,
மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகும் சூழல் உருவாகியுள்ளது என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
பெருந்திரளான பங்கேற்பு:
இந்த நிகழ்ச்சியில், பாமக நிர்வாகிகள், பசுமைத் தாயகம் அமைப்பின் நிர்வாகிகள், மகளிர் உள்ளிட்ட பொதுமக்கள்
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி :
விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர்
தமிழ். மதியழகன்