Sat. Jan 10th, 2026

சென்னை | ஜனவரி 8

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை ஆலந்தூரில் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

டோக்கன் பெற்றவர்களுக்கு வழங்கல் தொடக்கம்:

இன்றைய தேதியிட்டு டோக்கன் பெற்ற குடும்ப அட்டைதாரர்கள், காலை முதலே நியாயவிலைக் கடைகளில் வரிசையில் காத்திருந்து,

ஒரு கிலோ பச்சரிசி

ஒரு கிலோ சர்க்கரை

ஒரு முழு கரும்பு

ரூ.3,000 ரொக்கம்

ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புகளை பெற்றுக் கொண்டனர்.

டோக்கன் விநியோகம் நிறைவு:

நியாயவிலைக் கடைகளிலும், வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல் தொடங்கியதையடுத்து டோக்கன் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

டோக்கன் வாங்காதோர் என்ன செய்ய வேண்டும்?

இதுவரை டோக்கன் பெறாத குடும்ப அட்டைதாரர்கள்,
👉 ஜனவரி 13-ம் தேதி முதல்
👉 தங்களது அந்தந்த நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று,
👉 பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், டோக்கன் பெறாதவர்கள் தங்களது நியாயவிலைக் கடைகளில் சென்று விநியோக தேதி மற்றும் நடைமுறைகள் குறித்து உறுதி செய்து கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மொத்த பயனாளர்கள்

இந்த திட்டத்தின் மூலம்,

அரிசி குடும்ப அட்டைதாரர்கள்

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்

உட்பட 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

மாவட்டங்களில் தொடக்க விழா:

பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்கள், பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர். சில பகுதிகளில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், பின்னர் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட தலைமை செய்தியாளர் : ஜே. அமல்ராஜ்
தென்காசி மாவட்டம்

By TN NEWS