விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு செஞ்சி பெரியாயரம் காந்தி பஜாரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் காலை நடை திறக்கப்பட்டு மூலவர் செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்க அங்கி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புத்தாண்டையொட்டி செஞ்சிக்கோட்டை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயர் திருக்கோவில் அதிகாலை காலை நடை திறக்கப்பட்டு வீர ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பலவித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனையும் வீர ஆஞ்சநேயர் ரத்தின அங்கி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோட்டை வீர ஆஞ்சநேயர் அன்னதான குழுவினரால் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது.
கோட்டை ராஜகாளியம்மன் ஆலயம், செல்லியம்மன் ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. தொடர் அன்னதானமும் நடைபெற்றது.
செஞ்சி கன்மலை கிறிஸ்து ஆலயம், புனித மிக்கேல் அந்தோணியார் தேவாலயங்களில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக நள்ளிரவு சிறப்பு கூட்டு பிரார்த்தனை வழிபாடு நடைபெற்றது. புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர்: தமிழ். மதியழகன்.