தர்மபுரியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில்
சமத்துவ கிறிஸ்துமஸ் விழா – மாவட்ட தலைவர்களுக்கு வரவேற்பு!
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம் பி.பள்ளிப்பட்டியில் நடைபெற உள்ள சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட தலைவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக பொதுச் செயலாளர் திரு. புஸ்ஸி ஆனந்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக, இந்த விழா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்வு,
தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர்
திரு. தாபா M. சிவா
தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
அண்ணன் திரு. K. விஜயகாந்த்
ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
டிசம்பர் 25 – சமத்துவ கிறிஸ்துமஸ் விழா!
வரும் டிசம்பர் 25-ஆம் தேதி, பாப்பிரெட்டிபட்டி மேற்கு ஒன்றியம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த விழாவில்,
மாவட்ட
ஒன்றிய
நகர
பேரூர்
கிளை
வார்டு
பூத்
சார்பு அணி
உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் தோழிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

✍️ மண்டல செய்தியாளர்
ராஜீவ் காந்தி
