Sun. Jan 11th, 2026

 

திருவண்ணாமலை, வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் செயல்பட்டு வரும் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில், தமிழக அரசின் டாக்டர் எஸ். அரங்கநாதன் – நல்நூலகர் விருது பெற்ற ஜா. தமீம் அவர்களுக்கு பாராட்டு விழா, வந்தவாசி ரோட்டரி கிளப் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு தமிழ்ச் சங்கத் தலைவர் பீ. ரஹ்மத்துல்லா தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் முகமது அப்துல்லா, வந்தை பிரேம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலாளர் இரா. பாஸ்கரன் வரவேற்புரை ஆற்றினார்.

சிறப்பு உரை:

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ். குமார், நூலக வாசிப்பின் அவசியம் குறித்து உரையாற்றி, நல்நூலகர் விருது பெற்ற ஜா. தமீம் அவர்களின் சேவையை பாராட்டி சிறப்புரை ஆற்றினார்.

வாழ்த்துரைகள்:

இந்நிகழ்வில்,

தமிழ்ச் சங்க நிர்வாகிகள் க. வாசு, ஆ. முரளி

வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் வே. சிவராமகிருஷ்ணன்

எக்ஸ்னோரா கிளைத் தலைவர் சு. தனசேகரன்

ரோட்டரி சங்கத் தலைவர் ஷாஜகான்

ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மா. கதிரொளி

தென்னாங்கூர் அரசு கல்லூரி பேராசிரியர் உ. பிரபாகரன்

ரோட்டரி கிளப் உறுப்பினர் வீரராகவன்

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி கூட்டணி மாவட்ட

தலைவர் டி. சாந்தி

கோல்டு லீப் எக்ஸ்னோரா நிர்வாகி கேப்டன் பிரபாகரன்

தலைமை ஆசிரியை சாயிராபீ ஷேக்

நல்லாசிரியர்கள் ம. ரகுபாரதி, முபாரக்

கலைஞர் முத்தமிழ் சங்கம் வந்தை குமரன்

ஆக்ஸ்போர்டு ஸ்போக்கன் இங்கிலீஷ் மைய நிர்வாகி கு. சதானந்தன்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கலை நிகழ்ச்சி & ஏற்புரை:

முன்னதாக, தென்னாங்கூர் ரஜினி அவர்கள் பாடிய பாரதியார் பாடல்கள் நிகழ்வுக்கு சிறப்புச் சேர்த்தன.
நிகழ்ச்சியை கோட்டை தமிழ்ச் சங்க துணைத் தலைவர் பா. சீனிவாசன் தொகுத்து வழங்கினார்.
நல்நூலகர் ஜா. தமீம் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்.

நன்றி உரை:

இறுதியாக சங்க துணைத் தலைவர் எ. தேவா நன்றி கூறினார்.

விக்னேஷ்வர்
சென்னை

By TN NEWS