வேலூர், டிசம்பர் 15 :
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் லாவண்யா தினேஷ். இவர் குடியேற்றம் பாரதி தமிழ் தொண்டு அறக்கட்டளை இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவி என்ற பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும், வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் வெளிக்கண் மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், வேலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் பொது விநியோகத் திட்டக் கண்காணிப்பு குழு உறுப்பினராக லாவண்யா தினேஷை வேலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி சுப்புலட்சுமி அவர்கள் நியமித்துள்ளார்.
இந்தக் கண்காணிப்பு குழு, வேலூர் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் இயங்கி வரும் நியாய விலை (ரேஷன்) கடைகளின் செயல்பாடுகளை மேம்படுத்த,
பொது சேவையில் உள்ள குறைபாடுகளை களைய,
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் சீரான அளவில் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க,
நியாய விலை கடை விற்பனையாளர்கள் மீது பெறப்படும் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் – 2013, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு விதிகள் – 2017, விதி எண் **8(1)(இ)**ன் கீழ் மாவட்ட அளவில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் :
தலைவர் : வேலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி சுப்புலட்சுமி
உறுப்பினர்கள் :
வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த்
வேலூர் வருவாய் கோட்ட அலுவலர்
ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர்
வேலூர் குடிமைப் பொருள் புலனாய்வுத் துறை ஆய்வாளர்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்
கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர்
வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்
அலமேலுரங்காபுரம் பகுதியைச் சேர்ந்த திருவருள் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அறக்கட்டளை தலைவர் விஜயலட்சுமி
சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் குமரேஸ்வரன்
குடியாத்தம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த தமிழக மாற்றுத்திறனாளிகள் உரிமை மீட்பு சங்கம் மற்றும் தமிழ் மாநில அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர் நல வாழ்வு மத்திய பொதுச் சங்கத் தலைவர் செந்தில்குமார்
வேலூர் மகளிர் வழக்கறிஞர் சங்க நிர்வாகி வழக்கறிஞர் நித்திய தேவி, லாவண்யா தினேஷ்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்