Thu. Dec 18th, 2025

தருமபுரி மாவட்டம் | அரூர்

தருமபுரி மாவட்டம், அரூரில் உள்ள அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாரத்தான் மற்றும் கால்பந்து போட்டிகளில் அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.

இந்தப் போட்டிகளில் சுமார் 450 மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற நிலையில்,
அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த பார்த்தசாரதி (10-ம் வகுப்பு)
5 கிலோ மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 5-வது இடம் பிடித்து
சான்றிதழ் மற்றும் பதக்கம் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

மேலும்,
மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் 3-வது இடம் பிடித்து
அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குழுவாக வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

🏅 பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு

இந்த வெற்றிக்கு காரணமான
உடற்கல்வித் துறை ஆசிரியர்கள்
நல்லாசிரியர் பழனிதுரை,
முருகேசன் (உடற்கல்வி ஆசிரியர்)
ஆகியோருக்கு சிறப்பு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

👏 தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டு

வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களையும்
பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம்,
ஆண்–பெண் ஆசிரியர் பெருமக்கள்,
ஊர் பொதுமக்கள்,
பெற்றோர்–ஆசிரியர் கழகம் (PTA)
ஆகியோர் மனதார பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.


செய்தி : பசுபதி

By TN NEWS