திருப்பதி, 06 டிசம்பர் 2025:
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில் கட்டுவதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD)-க்கு 10.11 ஏக்கர் நிலத்தை பீகார் அரசு ஒதுக்கியுள்ளது.
இந்த முக்கிய முடிவை சந்திரபாபு நாயுடு, ஆந்திரப்பிரதேச முதல்வர் மற்றும் லோகேஷ், ஆந்திர அமைச்சர் ஆகியோர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இந்நில ஒதுக்கீட்டுக்காக TTD தலைவர் பி.ஆர். நாயுடு பீகார் அரசுக்கு தனது மனதார நன்றியை தெரிவித்தார்.
பீகார் மாநிலத் தலைமைச் செயலாளர் பிரதாய அம்ரித் (I.A.S.),
பாட்னாவின் மொகாமா காஸ் பகுதியில் உள்ள 10.11 ஏக்கர் நிலம் TTD-க்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக, TTD தலைவர் பி.ஆர். நாயுடுவிற்கு அதிகாரப்பூர்வ கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
இந்த நிலம் 99 ஆண்டுகளுக்கு ரூ.10,000 மட்டுமே குத்தகை வாடகையாக வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TTD குழுவினர் விரைவில் பீகார் மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழக இயக்குநருடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோயில் கட்டுமானம் தொடர்பான அனைத்து தேவையான நடைமுறைகளையும் மேற்கொள்ளப்படும் என TTD தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்தார்.
📍 கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே – மக்கள் தொடர்பு அதிகாரி