தென்காசி – டிசம்பர் 6
பாரத ரத்னா, சட்ட மாமேதை, சமூகப் புரட்சியாளர் அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளையொட்டி, தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் இன்று நன்னகரம் பகுதியில் உள்ள அவர்களின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் தென்காசி பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி அவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாவட்ட பொதுச்செயலாளர் சிவகுருநாதன், தென்காசி தெற்கு ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து, மாவட்ட பட்டியல் அணி தலைவர் அசோக், மாநில செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர்கள் பால்ராஜ், அழகுராஜன், விமல், பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கரின் சமூக நீதி, கல்வி சமத்துவம், அரசியல் சிந்தனைகள் குறித்து நினைவு கூரப்பட்ட இந்த நிகழ்வில் பலரும் பங்கேற்று அமைதியான சூழலில் அஞ்சலி செலுத்தினர்.
அமல்ராஜ்
தலைமை செய்தியாளர், தென்காசி மாவட்டம்