Wed. Dec 17th, 2025

தென்காசி, டிசம்பர் 5:
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில், காவலில் இருந்து தப்பிச் சென்ற குற்றவாளியை தேடிச் சென்ற போது, ஐந்து போலீசார் ஆயிரம் அடி உயரமுள்ள கடினமான மலைப்பகுதியில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இரவு முழுவதும் மலைப்பகுதியில் சிக்கிய காவலர்கள்:

குற்றவாளியை தடம் பின்தொடர்ந்து மலைமேல் ஏறிசென்ற போலீஸ் குழு, இருட்டு அதிகரித்ததும், வழித் தடம் தெரியாமல், சரிவான பாறைகள் மற்றும் காடு சூழ்ந்த பகுதிகளில் சிக்கிக் கொண்டனர். உயரமும், இருளும், ஆபத்தான நிலப்பரப்பும் காரணமாக இரவு முழுவதும் அங்கிருந்து வெளியில் வர முடியாத நிலை உருவானது.

காவல் கண்காணிப்பாளர் நேரடியாக சம்பவ இடத்துக்கு விரைவு:

நிலைமை குறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கண்ணிட்டார்.
போலீஸ் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு அவசர தகவல் அனுப்பினார்.

போக்கஸ் லைட் மற்றும் கயிறுகளின் உதவியுடன் மீட்பு நடவடிக்கை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, போக்கஸ் லைட்களை பயன்படுத்தி இரவு இருளை களைந்து, கயிறுகளை கட்டி சரிவான மலைப்பகுதிக்கு இறங்கி, ஒருவருக்கொருவராக போலீஸ் பணியாளர்களை பாதுகாப்பாக மேலே இழுத்து மீட்டனர்.

இந்த நடவடிக்கை இரவு நேரம் என்பதாலும், மலை உயரம் மற்றும் பாதை ஆபத்தானது என்பதாலும் மிகப்பெரும் சவாலாக இருந்தது. இருப்பினும் தீயணைப்பு வீரர்களின் விரைவான செயல்பாடால் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

பகுதியில் பரபரப்பு – பொதுமக்கள் கூடினர்:

காவலர்கள் மலைப்பகுதியில் சிக்கிய தகவல் பரவியதும், கடையம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மக்கள் பெருமளவில் திரண்டு பரபரப்பு நிலவியது. மீட்பு பணி நிறைவடைந்ததும் மக்கள் நிம்மதியடைந்தனர். மேலும் தீயணைப்புத் துறையினர் நடத்திய இந்த ஆபத்தான நிலையில் இருந்த காவல்துறையினரை காப்பாற்றிய உங்களுக்கு பாராட்டுக்கள் என மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ்நாடு டுடே
தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர்
TNT அமல்ராஜ்

By TN NEWS