30 நவம்பர் – குடியாத்தம், வேலூர் மாவட்டம்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 12ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்.எஸ். நகர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வளாகத்தில் இன்று காலை இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.
The Eye Foundation மருத்துவர்கள் இணைந்து பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை, ஆலோசனை, சிகிச்சை ஆகியவற்றை வழங்கினர்.
நிகழ்ச்சி தலைமை:
ஜெ. தினகரன், நகரத் தலைவர்
சிறப்பு அழைப்பாளர்கள்:
கே.எம்.ஜி. கல்விக் குழும நிறுவனர் மற்றும் மாநில செயலாளர் கே.எம்.ஜி. ராஜேந்திரன் முகாமை துவக்கிவைத்தார்
மாவட்டத் தலைவர் எஸ். அருணோதயம் மாவட்ட பொருளாளர் பி.எல்.என். பாபு நகர மன்ற உறுப்பினர் நளினி கே. ராமு சத்தியா மேலும் பலரும் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.
இலவச கண் முகாமில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனர்.இறுதியில் எம். ராம்குமார் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்
