பழனியில் போதை இல்லா தமிழக விழிப்புணர்வு நிகழ்ச்சி – மாணவர்களுக்கு காவல்துறையினர் உறுதிமொழி எற்படுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி:
அருள்மிகு பழனியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று “போதை இல்லா தமிழகத்தை உருவாக்க உறுதி மொழி ஏற்போம்” என்ற தலைமையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரியளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்;
லாவண்யா (காவல் ஆய்வாளர் – மது விலக்கு அமலாக்கப் பிரிவு, பழனி),
ராஜகுமாரன் (காவல் துணை ஆய்வாளர் – மது விலக்கு அமலாக்கப் பிரிவு, பழனி),
ஜோசப் பிராங்கிளின் (காவல்துறை அலுவலர், பழனி),
ஹபீப் (காவல்துறை அலுவலர், பழனி)
ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழிப்புணர்வு உரையாற்றினர்.
பள்ளியின் முதல்வர் இரா. முருகானந்தம், பொறுப்பாசிரியர் க. லாவண்யா ஆகியோர் முன்னிலையில், ஆசிரியர்கள் மற்றும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் பெருமளவில் பங்கேற்றனர்.
மொபைல் செயலி பயன்பாடு – மாணவர்களுக்கு நேரடி விளக்கம்:
போதை இல்லா தமிழகத்தை உருவாக்க அரசு அறிமுகப்படுத்தியுள்ள மொபைல் செயலி குறித்து மாணவர்களுக்கு காவல்துறையினர் விரிவான விளக்கங்களை வழங்கினர்.
அத்துடன், அந்த செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது, எவ்வாறு புகார் அளிப்பது, எந்த தகவல்கள் பாதுகாப்பாக பதிவு செய்யப்படுகின்றன ஆகியவற்றை மாணவர்கள் புரியும் வகையில் எடுத்துரைத்தனர்.
பள்ளி அருகே தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை – 10581க்கு உடனடி புகார்.
கல்வி நிறுவனங்களுக்கு 200 மீட்டர் சுற்றளவில்
போதைப் பொருட்கள்:
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள்
விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக 10581 இலவச உதவி எண்ணில் அறிவிக்க வேண்டும் என காவல் அலுவலர்கள் மாணவர்களுக்கு வலியுறுத்தினர்.
இவ்விழாவின் முடிவில் மாணவர்கள் அனைவரும்
“போதை இல்லா தமிழகத்தை உருவாக்க நாமும் பங்கு பெறுவோம்” என்ற உறுதி மொழி எடுத்தனர்.
A. தினேஷ்
தலைமை நிருபர், திண்டுக்கல் மாவட்டம்