
தாலுகா போலீசார் ஆளுயர கஞ்சா செடிகள் பறிமுதல்
நவம்பர் 27 – குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ள மோடிகுப்பம் பகுதியில், வாழைத்தோட்டத்தில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டதாகக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்தடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் குடியாத்தம் தாலுகா போலீசார் இன்று திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், கண்ணையன் (62) என்பவருக்கு சொந்தமான வாழைத் தோட்டத்தில் 6 அடியளவு உயரமுள்ள கஞ்சா செடிகள் சில வளர்க்கப்பட்டு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. பின்னர் போலீசார் அந்த கஞ்சா செடிகளை வேரோடு பிடுங்கி உடனடியாக பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, விவசாயி கண்ணையன் கைது செய்யப்பட்டு, அவரிடம் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
விவசாய நிலத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
