உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு திரு. பி.ஆர். கவாய் அவர்கள் ஓய்வு பெற்றதையொட்டி, இன்று அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தேன் என நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ப. வில்சன் தெரிவித்தார்.
நீதிபதி கவாய் அவர்கள் இந்தியாவின் தலைமை நீதிபதியாக குறுகிய காலமே பதவி வகித்திருந்தாலும், பல முக்கிய தீர்ப்புகள், முன்னோடி நிர்வாக முடிவுகள் உள்ளிட்ட சிறப்பான பணிகளை ஆற்றி நாட்டின் நீதித்துறைக்கு சிறப்பு சேர்த்துள்ளார். மேலும் சமூக நீதிக்கும், பிரதிநிதித்துவத்திற்கும் முக்கியத்துவம் அளித்து, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனங்களில் பல பரிந்துரைகள் செய்ததையும் அவர் குறிப்பிட்டார்.
வழக்கறிஞர்களுடன் இணக்கமான நடத்தை, வழக்காடிகளின் நலன் குறித்த அனுதாபம் ஆகிய தன்மைகள் நீதிபதி கவாய் அவர்களை மேலும் தனித்துவப்படுத்தியவை எனவும் ப.வில்சன் பாராட்டினார்.
இந்நாட்டிற்காக அவர் செய்த சேவைக்கு நன்றி தெரிவித்ததோடு, நல்ல ஆரோக்கியம் மற்றும் அமைதியான ஓய்வு வாழ்க்கை அமைய வாழ்த்தினேன் என்றும் தெரிவித்தார்.
#SupremeCourt #PWIlson_MP
ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்.

