Thu. Nov 20th, 2025

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் கரு பாலினக் கணிப்பு முறைகேடு …?

இரண்டு இடைத்தரகர்கள் கைது…!
செவிலியர் உட்பட 3 பேருக்கு வலை!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா? என சட்டவிரோதமாக பாலினம் கண்டறிந்து கூறுவதாக மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சிஸ்டமாட்டிக் கண்காணிப்பு – செவிலியர் மீது சந்தேகம்…?

இந்த தகவலைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் மறைமுகமாக கண்காணிப்பு மேற்கொண்டது. இதில் தற்காலிக செவிலியர் பரிமளா மீது சந்தேகம் எழுந்தது. கடந்த ஒரு மாத கால CCTV காட்சிகளை ஆய்வு செய்த போது, சம்பந்தமில்லாத ஆண் நபர்கள் கர்ப்பிணி பெண்களுடன் ஸ்கேன் அறைக்குள் செல்வதும், செவிலியர் பரிமளா பணம் பெறுவதும் போன்ற அதிர்ச்சிகரமான காட்சிகள் பதிவாக இருந்தன.

மருத்துவர் புகார் எதிரொலி! செவிலியர் தப்பி ஓட்டம்…!!

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம் உடனடியாக பாலக்கோடு காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதையறிந்த செவிலியர் பரிமளா தப்பி ஓடி தலைமறைவானார்.

போலீஸ் துப்பறியும் நடவடிக்கைகளில் ஆந்திராவில் இருந்து இருவர் கைது. வழக்கு பதிவு செய்த பாலக்கோடு போலீசார் சிறப்பு குழு அமைத்து விசாரணை மேற்கொண்டதில், கிளாரா மேனகாதேவி (25) – ஆந்திரா மாநிலம்
பிரதீப் (26) – ஆந்திரா மாநிலம்
வடிவேல் (41) – அனுமந்தபுரம்
மேலும் பெயர் தெரியாத நபர் ஒருவர், இவர்கள் பாலினக் கணிப்பு ராக்கெட்டில் இடைத்தரகர்களாக செயல்பட்டது தெரியவந்தது.

பின்னர் தகவல் அடிப்படையில் ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியில் பதுங்கி இருந்த கிளாரா மேனகாதேவி மற்றும் பிரதீப் ஆகியோரை போலீசார் கைது செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

இன்னும் மூன்று நபர்களை காவல்துறை அதிகாரிகள் தேடிவருகின்றனர்.

தப்பியோடிய செவிலியர் பரிமளா, மற்றும் மற்ற இரண்டு ஆண் நபர்கள் ஆகியோருக்கு போலீசார் தீவிரமாக வலை வீசி தேடிவருகின்றனர்.

மண்டல செய்தியாளர்
D. ராஜீவ்காந்தி

By TN NEWS