Wed. Nov 19th, 2025

லால் கிலா மெட்ரோ நிலையம் அருகே 10 பேர் பலி, 24 பேர் காயம்…?

டெல்லி, நவம்பர் 10:
இந்திய தலைநகர் டெல்லியில் இன்று மாலை பயங்கர வெடி விபத்து. லால் கிலா மெட்ரோ நிலையம் நுழைவு வாசல் எண் 1 அருகே நிறுத்தப்பட்டிருந்த ஹூண்டாய் i20 காரில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததும், 24 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெடிப்பின் அதிர்வால் அருகில் இருந்த சில வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. சம்பவ இடம் முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது. வெடிப்பின் சத்தம் பல தூரம் வரை கேட்டதாக  பொதுமக்கள் தெரிவித்தனர்.

 

போலீஸ் மற்றும் நுண்ணாய்வுத் துறை நடவடிக்கை

வெடிப்பு ஏற்பட்டதும் போலீசார் சம்பவ இடத்தை முற்றாக முடக்கியுள்ளனர்.
டெல்லி தீயணைப்பு துறையின் துணைத் தலைமை அதிகாரி ஏ.கே. மாலிக் கூறியதாவது:

“மாலை 7:29 மணிக்கு தகவல் வந்ததும் 7 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன. 34 நிமிடங்களில் தீயை கட்டுப்படுத்தினோம். உயிரிழப்பு அதிகமாக இருக்கலாம் என்ற அச்சம் உள்ளது,” என்று தெரிவித்தார்.

தற்போது நுண்ணாய்வுத் துறை மற்றும் டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

கார் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார்.

வெடித்த கார் ஹரியானா (HR26) பதிவு எண் கொண்டது.
போலீசார் அந்த கார் ஓக்லா பகுதியைச் சேர்ந்த முகமது சல்மான் மாலிக் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததை கண்டறிந்துள்ளனர்.

குருகிராம் போலீசார் சல்மானை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தெரிவித்ததாவது:

“சில மாதங்களுக்கு முன்பு அந்த காரை தெரியாத ஒருவரிடம் விற்று விட்டேன்,” என கூறியுள்ளார்.


” போலீசார் அந்த மர்ம நபரை கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.”

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து கடுமையான கண்காணிப்பு வளையத்தில் நாட்டின் முக்கிய நகரங்கள்”

“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார்.”

ஷேக் முகைதீன்.


📍#DelhiBlast #LalKilaDelhi #BreakingNews #MullaiMediaNetwork #TamilnaduTodayNews

     

 

 

 

 

 

 

     

By TN NEWS