Wed. Nov 19th, 2025

நவம்பர் 5, இராமநாதபுரம் மாவட்டம்:
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த அரசு பதிவு பெற்ற முதல் நிலை ஒப்பந்ததாரர்களில் ஒருவர் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் தார் சாலை அமைக்கும் பணிக்கான work order பெற்றிருந்தார்.

அந்தப் பணியை முடித்து, அதற்கான தொகையை விடுவிக்க வேண்டி, கடந்த அக்டோபர் 25ஆம் தேதி, இராமநாதபுரம் ஊரக வளர்ச்சி பொறியியல் பிரிவு Senior Drafting Officer வீரசேகரன் அவர்களைச் சந்தித்தார்.

அப்போது, பணத் தொகையை விடுவிக்க ரூ.1,20,000 லஞ்சத் தொகையை கமிஷனாக கேட்டு, அதனை Junior Drafting Officer நாகலிங்கம் அவர்களிடம் கொடுக்குமாறு வீரசேகரன் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை ஏற்க விரும்பாத ஒப்பந்ததாரர், இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதிகாரிகள் வழங்கிய உத்தரவின் பேரில், ரசாயனம் தடவிய ரூ.1.20 லட்சம் பணத்தை வழங்கியபோது, Senior Drafting Officer வீரசேகரன், Junior Drafting Officer நாகலிங்கம் மற்றும் உதவியாளர் அருண் ஆகிய மூவரையும் லஞ்சம் ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மூவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

செய்தி: இராமநாதபுரம் செய்தியாளர் செந்தில் 

ஒளிப்பதிவு: ரா. இராமச்சந்திரன்

By TN NEWS