Wed. Nov 19th, 2025


நவம்பர் 5 — வேலூர் மாவட்டம், குடியாத்தம்:
குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வட்டாட்சியர் கே. பழனி தலைமை தாங்கினார். வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார். தலைமையிடத்தில் துணை வட்டாட்சியர் மஞ்சுநாதன் வரவேற்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாய சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவற்றில் முக்கியமானவை:

சேம்பள்ளி ஊராட்சியில் உள்ள உப்பரபள்ளி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்,

சேங்குன்றம் முதல் சூறாளூர் வரை சாலைகளை சீரமைத்தல்,

தட்டாங்குட்டை ஏரி பாசன கால்வாய் தூர்வாருதல்,

நெல்லூர்பேட்டை ஏரி தூரெடுக்குதல்,

தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்வது ஆகியவை அடங்கும்.


விவசாயிகள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் உறுதி அளித்தார்.

இக்கூட்டத்தில் பல துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

செய்தி: குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

 

By TN NEWS