Wed. Nov 19th, 2025



தென்காசி நகரம், நவம்பர் — தந்தையை இழந்த கல்லூரி மாணவிக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.10,000 வழங்கப்பட்டது.

தென்காசி நகரம் 18-ஆம் வார்டு சேர்ந்த மாணவியின் தந்தை சில மாதங்களுக்கு முன் மரணமடைந்த நிலையில், குடும்பம் கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கியது. கல்லூரி கட்டணம் ரூ.36,000 செலுத்த முடியாததால் படிப்பைத் தொடர முடியாத சூழலில், மாணவியின் தாய் தென்காசி நகர நிர்வாகி சேக் மைதீன் அவர்களை அணுகி உதவி கோரினார்.

அதனைத் தொடர்ந்து, SDPI கட்சியின் தென்காசி மாவட்ட தலைவர் K.திவான் ஒலி அவர்களின் முன்னிலையில், மாணவியின் கல்லூரி நுழைவுத் தேர்வு கால் டிக்கெட் பெற முதல் கட்டமாக ரூ.10,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் சேக் மைதீன், நகர துணை செயலாளர் ஜாஹிர் உஷேன், தொகுதி துணை தலைவர் பாதுஷா ஆகியோர் கலந்து கொண்டு உதவித்தொகையை வழங்கினர்.

உதவி வழங்கிய நல்ல உள்ளம் கொண்ட ஜனாப் ராசக் சம்சு அம்மா மற்றும் திரு. ராஜா நித்யா குடும்பத்தினருக்கு SDPI நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.

செய்திகள்:
அமல்ராஜ்
தலைமை செய்தியாளர்
தென்காசி மாவட்டம்

By TN NEWS