காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2002 முதல் 2005ம் ஆண்டு இடையே வெளியான தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் உள்ள 11.22 லட்சம் வாக்காளர்கள், தற்போதைய சிறப்பு முகாமில் எந்த ஆவணங்களும் செலுத்த வேண்டியதில்லை. அதன்பின் சேர்ந்த, 2.79 லட்சம் வாக்காளர்கள், 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை, பெற்றோரின் ஆவணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்தல் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார். அலட்சியம் காட்டினால் பெயர் நீக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம், தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில், 1,401 ஓட்டுச்சாவடிகளுக்கு உட்பட்ட வாக்காளர்கள் திருத்த முகாம், நவ.,4 முதல், டிச.,4 வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக் கும் தலா ஒரு ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர், அடுத்த ஒரு மாதத்திற்குள், தனக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட ஒவ்வொரு வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று, வாக்காளர்கள் பற்றிய சரிபார்ப்பு செய்ய உள்ளார்.
வீடு பூட்டப்பட்டிருந்தால், வீட்டின் கதவில், விண்ணப்ப படிவம் வைத்துவிட்டு செல்ல தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. அதாவது, தமிழகத்தில் 2002 முதல் 2005ம் ஆண்டு கால இடைவெளியில் வெளியிடப்பட்ட, தீவிர திருத்த வாக்காளர் பட்டிய லில் இடம் பெற்றிருப்பவர் கள், இப்போது நடக்கும் தீவிர திருத்த முகாமில், ஆதார் உட்பட எந்த ஆவணங்களும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. இது தொடர்பான வாக்காளர் பட்டியல், தேர்தல் கமிஷன் இணையதளத்தி லும், வீட்டிற்கு வரும் அலுவலரிடமும் இருக்கும். இதில், தங்கள் பெயர் உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளலாம்.
இதன்படி, 1987க்கு பின் பிறந்தவர்கள், வாக்காளர் தன் பெயரிலான 12 ஆவணங்களில் ஒன்றையும், தன் பெற்றோரில் ஒருவரது ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், 2004க்கு பின் பிறந்தவர்கள், வாக்காளரின் சான்று, தாய், தந்தை என மூன்று பேரின் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். வீட்டிற்கு வரும் அலுவலரிடம் சமர்பித்தால் போதும்.
ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியவர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும். விளக்கம் அளிக்காவிட்டால் பெயர் நீக்க வாய்ப்பு உள்ளது. முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு குழப்பங்கள் இருப்பதால், வாக்காளர்கள் உஷாராக இருப்பது நல்லது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் கொண்டு வரும் விண்ணப்பத்தில், வாக்காளரின் போட்டோ கட்டாயம் ஒட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை; இருந்தால் விண்ணப்பத்தில் ஒட்டலாம். மேல்முறையீடுக்கு வழி ஓட்டுச்சாவடி அலுவலர் வீடுகளில் விண்ணப்பங்கள் பெறும் பணி முடிந்து, டிச.,9ல் வரைவு வாக்காளர் பட்டியலில், பெயர் இல்லை என்றால், ஆர்.டி.ஓ.,விடம் வாக்காளர் மேல்முறையீடு செய்யலாம். மேலும், விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல், மேல்முறையீடு செய்தல் என, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் அனைத்திற்கும் வழிவகை செய்யப் பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிந்து, பிப்ரவரி 7ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
பெ லோகநாதன்,
காஞ்சீபுரம் மாவட்ட செய்தியாளர்