தென்காசி,
தென்காசி மாவட்ட அரசு விழாவில் கலந்துகொள்ளச் செல்லும் வழியில், சுரண்டை நகராட்சி கீழசுரண்டை பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் சிலம்பம் சுற்றி உற்சாக வரவேற்பு நிகழ்த்தினர்.
அந்த வேளையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மாணவர்களின் ஆற்றலைப் பாராட்டி, அவர்களுடன் சேர்ந்து சிலம்பம் சுற்றி உற்சாகம் அளித்தார்.
மாணவர்கள் அளித்த பாரம்பரிய வரவேற்பு காட்சியை கண்ட பொதுமக்களும் கைத்தட்டிச் சிறப்பித்தனர்.
தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளை ஊக்குவிக்கும் விதமாக முதலமைச்சர் காட்டிய இந்நடவடிக்கை சமூக வலைதளங்களில் பெருமளவில் பாராட்டுப் பெற்றுள்ளது.
அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்.