Thu. Nov 20th, 2025

 


குடியாத்தம், அக். 29:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் தீவிர சிறப்பு முறை திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார். வட்டாட்சியர் கி. பழனி மற்றும் பேரணாம்பட்டு வட்டாட்சியர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.

நேர்முக உதவியாளர் ரமேஷ் வரவேற்புரை ஆற்றினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர கழகச் செயலாளர் ஜே. கே. என். பழனி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பொன். தனசீலன், சிபிஎம் கட்சியின் துரைசெல்வம், சிலம்பரசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இறுதியில் தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியர் வெங்கடேசன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS