Wed. Nov 19th, 2025

 


புதுடெல்லி:
மத்திய அரசு ஊழியர்களின் சம்பள மற்றும் சலுகை மாற்றங்களை பரிசீலிக்க 8வது மத்திய ஊதிய ஆணையம் (8th Pay Commission) அமைக்கப்படுவதாக மத்திய அமைச்சரவை இன்று (28.10.2025) ஒப்புதல் வழங்கியுள்ளது.

👩‍⚖️ குழு உறுப்பினர்கள் நியமனம்;

தலைவர்: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய்

உறுப்பினர்: ஐ.ஐ.எம். பெங்களூரு பேராசிரியர் புலாக் கோஷ் (பகுதி நேரம்)

உறுப்பினர்: தற்போதைய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு செயலாளர் பங்கஜ் ஜெயின்.

அமலாக்க அட்டவணை:

குழு 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

புதிய ஊதியம் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

💰 முக்கிய மாற்றம்:

தற்போது இருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 இருந்து
ரூ.26,000 ஆக உயர வாய்ப்பு உள்ளது.

📌 பின்னணி:

7வது ஊதியக்குழு பரிந்துரைகள் 2016 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டன.
8வது ஊதியக்குழு அமலாக்கத்துடன், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் திருத்தப்பட்ட DA (Dearness Allowance) விகிதங்களிலும் மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முடிவால் நாடு முழுவதும் சுமார் 48 லட்சம் அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியர்களும் பலன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்

By TN NEWS