Thu. Nov 20th, 2025

 


📍 வேலூர் மாவட்டம் – குடியாத்தம், நெல்லூர் பேட்டை ஊராட்சி, லிங்குன்றம் கிராமம்
🎯 மோர்தனா அணை கால்வாய் உடைப்பு – குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் – பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு.

வேலூர் மாவட்டத்தில் கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்த வடகிழக்கு பருவமழை, குடியாத்தம் அருகே உள்ள நெல்லூர் பேட்டை ஊராட்சி, லிங்குன்றம் கிராம பகுதிகளில் மோர்தனா அணை கால்வாய் உடைப்பு ஏற்படுத்தியது. இதன் காரணமாக, குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் நுழைந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி கிராம பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றுக், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி செய்தார்.

இந்த ஆய்வில் பங்கேற்றோர்:

நெல்லூர் பேட்டை ஊராட்சி துணை தலைவர் பிச்சாண்டி

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி சந்திரசேகர்

வார்டு உறுப்பினர் முல்லை நாகராஜ்

புரட்சி பாரதம் கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் மேகநாதன்

ஒன்றிய குழு துணை தலைவர் கே கே அருன் முரளி

அ.தி.மு.க. ஒன்றிய கழகச் செயலாளர் எஸ் எல் எஸ் வனராஜ்

ஒன்றிய துணை செயலாளர் செ.கு வெங்கடேசன்

நெல்லூர் பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் வள்ளிநாயகி

கொண்ட சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார்

நெருங்கி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மோகன்




🖋️ குடியாத்தம் தாலுகா செய்தியாளர் – கே வி ராஜேந்திரன்

 

By TN NEWS