Thu. Nov 20th, 2025



எம்.எல்.ஏ கே.எஸ். மஸ்தான் அடிக்கல் நாட்டி பணி துவக்கம்

விழுப்புரம் மாவட்டம் – செஞ்சி:
செஞ்சி அருகே கெங்கவரம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித் துறையின் 15வது நிதிக்குழு மானிய திட்டம் 2025–26 கீழ், ரூ. 1 கோடியே 45 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று (அக். 27) நடைபெற்றது.

இந்நிகழ்வில் செஞ்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர் விஜயகுமார் தலைமையில், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மஸ்தான் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் சத்தியமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் யோகபிரியா, செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், பிரபா சங்கர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் சத்யா கார்த்திகேயன், ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரி பொற்ச்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

📍 விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர் : தமிழ். மதியழகன்

By TN NEWS