Thu. Nov 20th, 2025

மதுரை:
மதுரை கிருஷ்ணாபுரம் காலனி 4வது தெருவில் அமைந்துள்ள அருள்மிகு திருமுருகன் திருக்கோயில் வளாகத்தில் இன்று (அக்டோபர் 27, 2025) ஆறாம் நாள் சஷ்டி பூஜை சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, ஆர்ச்சனை உள்ளிட்ட வழிபாடுகளில் கலந்து கொண்டு வழிபட்டனர்.

சஷ்டி விழாவின் நிறைவு நாளை முன்னிட்டு கோயில் வளாகம் மின்விளக்குகள் மற்றும் மலர் அலங்காரங்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தகவல்: வசந்தகுமார், டவுன் ரிப்போர்டர், மதுரை

By TN NEWS