Thu. Nov 20th, 2025


அரூர், அக்.24:
அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேடகட்டமடுவு ஊராட்சி தா. அம்மாப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தென் பெண்ணையாற்றில் நேற்று மதியம் துரதிஷ்டவசமாக ஒரு சிறுவன் நீரில் மாட்டிக் கொண்ட நிலையில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நேற்று மதியம் 1.15 மணியளவில், 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ரித்திக் (தந்தை: ரவிக்குமார்) ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மாட்டிக் கொண்டார்.

தகவல் கிடைத்ததும் அரூர் தீயணைப்பு துறையின் வீரர்கள் மற்றும் அங்குள்ள ஊர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நீண்ட தேடுதலுக்குப் பிறகு மாலை 5.45 மணியளவில் அந்த சிறுவனையும், அவருடன் இருந்த இரு நண்பர்களையும் மீட்டனர்.

இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (Deputy BDO), கிராம நிர்வாக அலுவலர் (VAO), காவல்துறையினர் (PC), கிராம ஊராட்சி எழுத்தாளர் (Clerk), தன்னார்வலர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.



இந்த பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் அரூர் சட்டமன்ற உறுப்பினர், ஒன்றிய கழக செயலாளர், மாநில நூலக குழு உறுப்பினர் திரு. வே. சம்பத்குமார் MLA அவர்கள்

“மனமார்ந்த பாராட்டுகளையும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும்” தெரிவித்துக் கொண்டார்.



பசுபதி, செய்தியாளர்

 

By TN NEWS